தமிழகத்தில் மின் கட்டணம் உயருமா? மின்சாரத்துறை முக்கிய விளக்கம்..!

தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரம்பரியம்மிக்க பெண்ட்லேண்ட் மருத்துவமனை புதியதாக கட்டப்பட்டு இன்று மாலைக்குள் மின் இணைப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஜென்ரேட்டர் வசதிகளும் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தோம். இம்மாவட்டத்தில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அடுக்கம்பாறையில் கட்டப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையம் மூன்று மாதத்தில் செயல்பட துவங்கும். மின்சார வாரியத்தில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மின் தடை பாதிப்பு இல்லாமல் இருக்க 1,257 மெகாவாட் மின் தேவை மின்மாற்றியும் கூடுதலாக வைத்துள்ளோம். கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும். மின் பகிர்மானத்திற்காக கூடுதலாக துணை மின் நிலையங்கள் இந்த ஆண்டு அமைக்க மின்வாரிய நடவடிக்கை எடுத்துள்ளது
வேலூர் மாவட்டத்திற்குஉயர் மின் அழுத்த மின் கம்பிகள், தாழ்வு மின்சாரம் கடத்தும் மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் 7,230 கிலோ மீட்டர் தூரம், தாழ்வு மின்சாரம் அழுத்த கேபிள்களும், உயர் மின் அழுத்த கேபிள் 142 கிலோமீட்டரும், 5,022 மின் கடத்தும் மின்மாற்றிகள், 1.69 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளது. மிக விரைவில் உடன்குடியில் 1320 மெகாவாட் அனுமின்நிலையத்தை முதல்வர் துவங்கி வைக்கவுள்ளார். காற்றாலை மற்றும் தண்ணீரிலிருந்தும் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே நாம் முதலிடத்தில் உள்ளோம். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியும் நம்மிடம் உள்ளது. 765 மெகாவாட்டில் கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகரில் துணை மின் நிலையங்கள் உள்ளது.
100 துணை மின் நிலையங்கள் அடுத்த மாதம் முதல் அமைக்கப்படவுள்ளது. மீதமுள்ள 200 துணை மின் நிலையங்கள் அடுத்த மாதத்திற்குள் துவங்கவுள்ளோம். மின் உற்பத்தியில் இந்த ஆண்டு எந்த பற்றாக்குறையுமில்லை. ஆண்டுதோறும் காற்றாலை மற்றும் சோலார் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென கூறியுள்ளோம். ஒரு யூனிட் ரூ. 6 கீழ் கிடைக்கும் மின்சாரத்தையும், மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. இந்தியா முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் துவங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டிலும் ஸ்மார்ட் மீட்டர் 1.42 கோடி பேருக்கு வழங்க ஒப்பந்தம் கோரியுள்ளோம். வேளாண் மற்றும் தொழில் துறை தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்க தேவையான சீரான மின்சாரம் வழங்குவதே காரணம். காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு போர்க்கால அடிப்படையில் அரசு கவனத்திற்கு கொண்டு சென்று அரசு விதிகளை பின்பற்றி தேவைக்கு ஏற்ப மின்வாரிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மின் கட்டணம் உயர்வு மாற்றம் வராது. தேவைக்கு ஏற்ப மின் துறைக்கு நிதியும் ஒதுக்கியுள்ளது அரசு. மின்வாரிய நஷ்டம் என்பது இந்த ஆண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது. மின்வாரியத்திற்கு ஆண்டுக்கு 17ஆயிரம் கோடி மானியம் கிடைக்கும். நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக முதல்வரும், அரசும் அரசு ரூ.17 ஆயிரம் கோடி கொடுக்கிறது. மின்வாரியம் 20 ஆயிரம் கோடி வருவாயும் ஈட்டியுள்ளது. தேவைக்கு ஏற்ப திட்டங்களுக்காக இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.