இப்படி கூட மரணம் வருமா ? சிக்கன் பார்பிக்யூ சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு..!
கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் எப்போதும் அங்கு குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் அழகை கண்டுகளிக்க வருகின்றனர். அவ்வாறு வரும் போது சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு, இரவு நேரங்களில் பார்பிக்யூ சிக்கனை தயார் செய்து விட்டு ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டத்துடன் கழிக்கின்றனர்.
அப்படி வந்த 4 இளைஞர்களில் 2 பேர் உயிரை சிக்கன் பார்பிக்யூ பறித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா..?
திருச்சியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். இங்குள்ள சின்னபள்ளதில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் கொடைக்கானலில் உள்ள மதுபான கடையில் மதுபானம், பார்பிக்யூ செய்ய சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள், மேலும் அதனை தயார் செய்ய அடுப்பு கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றை தயார் செய்து தங்கும் அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மது அருந்தி விட்டு , அடுப்பு கரியை கொண்டு தங்கும் அறையிலேயே பார்பிக்யூ சிக்கன் சமைத்துள்ளனர். பிறகு ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய இருவரும் ஒரு அறையிலும் சிவசங்கர், சிவராஜ் ( சகோதரர்) ஆகிய இருவர் வேறு ஒரு அறையிலும் உறங்கியுள்ளனர்.
இதில் இரவு பார்பிக்யூ சிக்கன் சமயல் முடித்து விட்டு அந்த அடுப்பினை அணைக்காமல் தங்களது அறையியே குளிருக்காக அப்படியே விட்டு விட்டு உறங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று காலை அவர்களை எழுப்ப சென்ற போது அவர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து அவர்களை சோதித்த போது அந்த இருவரும் உயிர் இழந்ததாக தெரிந்தது.
அதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது நேற்று இரவு அடுப்பு கரி அமைக்காமல் அறையிலேயே வைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து இறந்து போன அந்த இருவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல் ட்ரிப்பில் பார்பிகியூ சிக்கன் சமைத்த திருச்சி நண்பர்கள் மரணம்#kodaikkanaltrip #bbqchicken pic.twitter.com/sqyMIBc3mv
— Thanthi TV (@ThanthiTV) August 10, 2024