இப்படி கூட மரணம் வருமா ? எலிக்கு வைத்த விஷத்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு..!
குன்றத்தூரில் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த நேற்று (நவ. 13) மருந்து அடித்தனர். இது காற்றில் பரவியதால் ஏ.சி. அறையில் தூங்கிய கிரிதரன் (34), மனைவி பவித்ரா (31), மகள் வைஷ்ணவி (6), மகன் சாய் சுதர்சன் (1) ஆகிய நால்வருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் கிரிதரன் மற்றும் மனைவி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காற்றில் பரவிய எலி மருந்தின் நெடி காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.