இப்படி கூட மரணம் வருமா ? கை தவறி கொதிக்கும் கஞ்சி ஊற்றியதில் சிறுமி உயிரிழப்பு..!
பீகாரைச் சேர்ந்த தொழிலாளி பிகாஷ் ரவிதாஸ் (38). கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் வேலைகளை பிகாஷ் ரவிதாசின் மகள் நந்தினி (16) செய்து கொண்டிருந்தார். அப்போது, சமையல் அறையில் உள்ள கியாஸ் அடுப்பின் மீது பெரிய பாத்திரத்தில் சாப்பாடு சமைத்துக் கொண்டு இருந்த போது சாப்பாடு வடிக்க முயற்சி செய்துள்ளார்.
சாப்பாடு பாத்திரத்தைத் தூக்கி கஞ்சியை வடிக்க முயற்சி செய்தபோது கை தவறியது. இதனால் சாதம் இருந்த சமையல் பாத்திரம் நந்தினி மீது தவறி விழுந்தது. இதில் சிறுமி நந்தினி மீது கொதிக்கும் கஞ்சி ஊற்றியதால் உடலில் பல இடங்களில் வெந்து காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த சிறுமி நந்தினி சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நந்தினி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.