இப்படி கூட மரணம் வருமா ? படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன் பலி.!
வெளியூரில் வேலை செய்யும் சிறுவன் விடுமுறையில் ஜார்கண்ட் திரும்பிய நிலையில் அவருடைய மாமா ரசகுல்லா வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட நிலையில் திடீரென தொண்டையை அடைத்தது.
ரசகுல்லா தொண்டையில் திடீரென அடைத்துக்கொண்டதை அடுத்து மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தார்.
ரசகுல்லா தொண்டையில் அடைத்ததும் சில நிமிடங்கள் மூச்சு விட சிரமப்பட்டதாகவும் அதன் பிறகு உயிர் இழந்ததாகவும் அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாததால் சிறுவன் மூச்சு விட சிரமப்படுவதை யாரும் கவனிக்கவில்லை. சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுவனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.