1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? வாயில் தேனீ நுழைந்ததால் உயிரிழந்த நடிகையின் முன்னாள் கணவர்..!!

1

இந்தியாவில் வாகன உபகரணங்களுக்கு பெயர் போன நிறுவனமாக சோனா குழுமம் இருக்கிறது. இந்த சோனா குடும்பத்தை நிறுவியது சஞ்சய் கபூரின் தந்தையான சுரேந்தர் கபூர் தான். சஞ்சய் கபூருக்கு சிறுவயதிலிருந்தே போலோ விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் . போலோ விளையாட்டை ஒரு புறம் கற்று வந்த அவர் தன்னுடைய தந்தையின் தொழிலையும் மற்றொருபுறம் கவனித்து வந்தார்.


கடந்து 2003 ஆம் ஆண்டு சோனா குழுமத்தின் ஒரு இயக்குனராக இவர் வேலைக்கு சேர்ந்தார். இதனை அடுத்து இந்த நிறுவனத்தை சர்வதேச அளவிலான ஒரு பிராண்டாக உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் அதில் வெற்றியும் பெற்றார்.

சஞ்சய் கபூரை பொறுத்தவரையில் இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. முதலில் இவருக்கு மும்பையை சேர்ந்த பேஷன் டிசைனர் நந்திதாவுடன் திருமணம் நடைபெற்றது. 2000 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர் .2003 ஆம் ஆண்டில் சஞ்சய் கபூர் பிரபல நடிகையான கரிஷ்மா கபூருடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர் . பின்னர் சஞ்சய் கபூர் பிரியா சச்தேவ் என்ற மாடலிங் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.


சஞ்சய் கபூர் விளையாட்டு துறையிலும் திரை துறையிலும் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார். திரைத்துறையில் இவர் பிரபலமாக இருப்பதற்கு காரணம் இவர் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர், விளையாட்டு துறையில் ஒரு பிரபலமாக இருப்பதற்கு காரணம் போலோ எனப்படும் குதிரை சவாரி விளையாட்டில் இவர் கை தேர்ந்தவர் . 53 வயதாக கூடிய சஞ்சய் கபூர் பிரிட்டனில் உயிரிழந்திருக்கிறார்.

இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இவர் போலோ விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தேனீ பூச்சி இவருடைய வாயில் நுழைந்து கடித்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது இருந்தாலும் மாரடைப்பு தீவிரமாக ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Trending News

Latest News

You May Like