இப்படி கூட மரணம் வருமா ? கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு..!

பெங்களூரை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் உள்ளான்.இதில் பால்ராஜ் ஸ்விக்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று, ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டு கேன்சல் ஆன கேக்-ஐ ஸ்விக்கி டெலிவரி ஊழியரான பாலராஜ் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.அந்த கேக்கை வீட்டில் உள்ள அவரது மனைவி மற்றும் 5 வயது குழந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவரது 5 வயது குழந்தை மயங்கி உள்ளான். உடனே சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுள்ளது. எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். சற்று நேரத்தில் கணவன் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக அவர்களும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், food poisoning காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டர்களா அல்லது கேக்கில் வேறேதும் கலந்து உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.