1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? மோமோஸ் மாவு மெஷினில் சிக்கி 15 வயது சிறுமி பலி..!

1

டெல்லியின் ஹனுமான் சவுக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாவு பிசையும் இயந்திரத்தில் மாட்டி 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்ப்ரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் இயந்திரத்தை இயக்கிய சிறுமியின் கை உள்ளே மாட்டிக்கொள்ளவே அவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர். கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை உதவியாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியை வேலைக்கு வைத்த ராஜேஷ் குமார் என்பவர் மீது போலீசார் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like