இப்படிக்கூட மரணம் வருமா ? ரயிலின் ப்ரேக் ஷூ கழன்று விழுந்து விவசாயி உயிரிழப்பு..!

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது. தண்டவாளம் வழியாக சென்ற விவசாயி சண்முகவேல் தலையில் ரயிலின் பிரேக் ஷூ விழுந்தது. சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் எட்டிமயில் அருகே வரும் போது ரயிலின் பிரேக் ஷூ பழுதடைந்து கீழே விழுந்து தூக்கி வீசப்பட்டதில், விவசாய வேலைக்காக அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சண்முகவேல் விவசாயி முகத்தின் மேல் விழுந்தது. அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.