பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா ? தமிழக போக்குவரத்து துறை விளக்கம்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இந்த முறை பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. இதன் காரணமாக அதற்கு ஏற்றவாறு பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதற்குப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் குறைந்த கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கமான கட்டணமே தற்போது வசூல் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.