1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணியா? அண்ணாமலை சொன்ன பதில்!

1

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் டெல்லி பயணம் குறித்தும், தலைவர்களுடனான சந்திப்பு குறித்தும் பேசினார்.

அமித் ஷா அவர்களை பார்த்து பேசினேன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன், அமைப்பு ரீதியாக பி.எ.சந்தோஷ் அவர்களை சந்தித்து விவாதித்தேன்.2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தமிழக நலனுக்கான தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்து இறக்கப்பட வேண்டும்.


கூட்டணி குறித்து பேச வேண்டிய தேவையோ நேரமோ இப்போது இல்லை. 9 முதல் 10 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. அதன் பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும்.


தமிழக நலனா, கட்சியின் வளர்ச்சியா என்றால் தமிழக நலனைத் தான் தேர்ந்தெடுப்போம். மாநிலத் தலைவர் என்றாலும் கட்சியின் தொண்டன் தான் அண்ணாமலை. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவோம்” என்று கூறினார்.


தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். அது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களை நாமும் கைது செய்துள்ளோம். ஏழு படகுகள் வரை கைப்பற்றியுள்ளோம்.

தமிழ்நாடு மீனவர்கள் சர்வதேச எல்லையை வேண்டும் என்றே தாண்டுவதில்லை. கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்த பின்னர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவை கடலில் இழந்திருக்கிறோம்” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like