1. Home
  2. தமிழ்நாடு

நான் இன்று மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன் : பிரதமர் மோடி ட்வீட்..!

1

பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், காவல் இணை ஆணையர்கள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவலர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னை செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. 

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள்  மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னை வருகை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தலத்தில் பதிவித்துள்ளதாவது  நான் மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நாளை பிஜேபி தமிழ்நாடு சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like