1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை ஜெயிப்பாரா ? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!

1

தமிழ்நாட்டில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்று பலரும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுகவின் கணபதி ராஜ்குமாரே வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளன. அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் 2ஆம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை 3 ஆம் இடத்தை பிடிக்க தான் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.

தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கோவையில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளை பெறுவார் என்றும், அதிமுக சிங்கை ஜி. ராமச்சந்திரன் 31 % வாக்குகளை பெறுவார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 30.5% வாக்குகளை பெறுவார் என்று தெரிவித்து உள்ளது.

பெரும்பாலானா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை தொகுதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரித்துள்ள அண்ணாமலை, 4ஆம் தேதி உங்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்.

 

Trending News

Latest News

You May Like