1. Home
  2. தமிழ்நாடு

முருகன் மாநாட்டை குஜராத் , உ.பி-யில் அமித்ஷா நடத்துவாரா..? செல்வப் பெருந்தகை கேள்வி

Q

மதுரையில் பாஜக சார்பில் முருகர் பக்தர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முருகன் மாநாட்டை குஜராத் , உத்தரபிரதேசத்தில் அமித்ஷா நடத்துவாரா என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை கூறியதாவது: தமிழ்நாட்டில் ஏதாவது ? குழப்பம் செய்யலாமா என சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஒரு போதும் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தமிழ் மண்ணில் இடம் இல்லை.யாரும் சண்டை போடவில்லை, எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம்.

எங்களுடைய உரிமை தொகையை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஜி.எஸ்.டி செலுத்துவதில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.ஆனால் எங்களுடைய உரிமை தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடர் பாதிப்பு வந்த மாநிலத்திற்கு கொடுக்காமல் வராத மாநிலத்திற்கு கொடுக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய 2000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறீர்கள். இது போன்ற உரிமை கேள்வியை மட்டும் தான் கேட்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு அவர்கள் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள் மாண்புமிகு முதல்வர் இதை கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார் என நினைக்கிறார்களா?..ஒன்றிய அமைச்சர் முருகன் பதவிக்கு வந்தார், தமிழ்நாட்டிற்கு தேவையானவைகளை அவர் தானே பேசி பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கேட்பதில்லை. பா.ஜ.க தலைவர்கள் ஏன் ? தமிழ்நாட்டில் நலனுக்காக குரல் கொடுப்பது இல்லை?. இதுதான் பா.ஜ.க விற்கு மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like