விஜயுடன் அதிமுக கூட்டணி வருமா ? ஜெயக்குமார் சொன்ன பதில்..!
அதிமுக - தவெக கூட்டணி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்டாகுமா என்ற விவாதங்கள் அரசியல் களத்தில் தீவிரமாக எழுந்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் கட்சி தொடங்கியதற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி குறித்து கட்சித் தலைமையும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு எடுப்பார்கள். 2026ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது அன்புமணி ராமதாஸின் கருத்து” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “திமுக ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. திமுக தமிழகத்தை சூறையாடி அதன்மூலம் கோடி கோடியாக கொள்ளை அடித்து ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளது. ரோபோவாக ரிமோட் ஆட்சி ஸ்டாலின் நடத்துகிறார். அதிமுகவின் திட்டங்களை எல்லாம் மூடிவிட்டு மக்கள் விரோத செயலில் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.