1. Home
  2. தமிழ்நாடு

கோவை அருகே கேட்டை உடைத்து வீட்டிற்குள் வந்த காட்டு யானை..!

1

மருதமலை வனப்பகுதியில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தில் இருந்து வெளியேறி, வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று மருதமலை ஐ.ஓ.பி காலனி பகுதியில் உலாவியது

அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த அந்த காட்டுயானை வீட்டில் வளர்க்கப்பட்ட அலங்கார தாவரங்களை உட்கொண்டது. எனினும் பசி அடங்காததால் அந்த வீட்டின் கதவை உடைத்து தும்பிக்கையை உள்ளே விட்டு உணவுப் பொருட்கள் ஏதும் உள்ளனவா? என்று தேடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்  பதறி அடித்துக்கொண்டி வீட்டின் மாடிக்கு ஓட்டம்பிடித்தனர். இதனிடையே, வீட்டில் வேறு உணவு பொருட்கள் கிடைக்காததால் அந்த காட்டு யானை சிறிது நேரத்திற்கு பின்னர் வனப்பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், ஐஓபி காலனி பகுதியில் காட்டு யானைகள் நள்ளிரவில் உலா வருவது தொடர் கதையாகி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதனால் வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழைவத தடுக்கவும், வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


 

Trending News

Latest News

You May Like