மனைவிக்கு தலைப்பிரசவம்!! இ-பாஸ் கிடைக்காததால் தற்கொலை செய்துக் கொண்ட புது மாப்பிள்ளை!

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி. காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த வருடம் ரோஜா என்பவருடன் கல்யாணம் நடந்தது.
ரோஜா சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானார். அதனால் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் சில நாட்களில் பிரசவம் ஆக போவதாக விக்கிக்கு போன் செய்து மாமியார் வீட்டில் சொன்னார்கள்.
பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ-பாஸ் பதிவு விட்டு காத்திருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இதனால் கடுமையான விரக்தி இருந்தார்.
கடந்த 20ம் தேதி இவர்களது முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது. அப்போதாவது மனைவியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை. அதனால் மனம் உடைந்த விக்கி, வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை ரோஜாவுக்கு பிரசவ வலி வரவும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் அனுமதித்துவிட்டு, விக்கிக்கு போன் செய்தனர். அப்போது அவர் போன் எடுக்காததால் , நண்பருக்கு போன் செய்து என்ன ஏதென்று பார்க்க சொன்னார்கள்.
அந்த நண்பர் வந்து பார்த்த பிறகு தான், விக்கி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
newstm.in