மனைவியின் , தங்கையுடன் உல்லாசமாக இருந்த சகலை !! இறுதியில் நேர்ந்த சோகம்..

மனைவியின் , தங்கையுடன் உல்லாசமாக இருந்த சகலை !! இறுதியில் நேர்ந்த சோகம்..

மனைவியின் , தங்கையுடன் உல்லாசமாக இருந்த சகலை !! இறுதியில் நேர்ந்த சோகம்..
X

தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (27). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவியின் அக்கா கணவர் விக்னேஸ்வரன் (28). பழ வியாபாரம் செய்து வருகிறார். இதனிடையே, பிரேம்குமாருக்கு தனது மனைவியின் அக்காவும் , விக்னேஸ்வரனின் மனைவியுமான இளம் பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனைவியின் அக்காவை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் பிரேம்குமார். அப்போது, இவரும் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த தகவல் விக்னேஷ்வரனுக்கு தெரிந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ்வரன், சகலையான பிரேம்குமாரிடம் சண்டை போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பிரேம்குமாரை கொல்ல திட்டம் போட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு, பிரேம்குமாரை தேடி கே.டி.சி. நகருக்கு சென்றுள்ளார் விக்னேஸ்வரன். அப்போது, வீட்டில் இந்த பிரேம்குமாரிடம், தனது மனைவி உடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டிப்புடன் கூறியுள்ளார் விக்னேஸ்வரன். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயம் அடைந்த பிரேம்குமார், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனாலும், விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் ஓடஓட விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விக்னேஸ்வரனும் நண்பர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல்துறையினர், பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தடயவியல் நிபுனர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பம் பிடித்த நாய் கொஞ்சம் தூரம் ஓடி நின்றிவிட்டது. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விக்னேஸ்வரன், அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் சகலையை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it