1. Home
  2. தமிழ்நாடு

இனி மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி..!

11

சென்னையை சேர்ந்த ஒரு பெண், பாஸ்போர்ட் பெறுவதற்கு தனது கணவரின் கையெழுத்து வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கணவரிடம் அனுமதி பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறுவது சரியல்ல," என்று தெரிவித்தார். மேலும், "கணவன் மனைவியுடன் உறவில் பிரச்சினை இருக்கும் நிலையில், கணவரிடம் கையெழுத்து பெறுவது என்பது பெண்ணுக்கு இயலாத காரியம். கணவரின் கையெழுத்து வேண்டும் என்று வற்புறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணை கணவனின் உடைமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே அதிகாரியின் செயல் காட்டுகிறது," என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

"திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்துவிட மாட்டார். எனவே, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை," என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, உடனடியாக அந்த பெண்ணுக்குப் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு, பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like