பேஸ்புக்கில் மனைவி வேறு நபருடன் தொடர்பு !! தொடர்பை துண்டிக்க கணவன் செய்த செயல் என்ன தெரியுமா ?
ஈரோடு மாவட்டம் ஆலாங்காட்டு பகுதியை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்திக்கும் , லோகநாயகிக்கும் திருமணாமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.லோகநாயகி கடந்த சில ஆண்டுகளாக தனது செல்போனில் முகநூல் மூலமாக ஈரோட்டை சேர்ந்த சண்முகையா ( எ )சதீஷ் உடன் தொடர்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நீண்டுள்ளது. ஒரு கட்டத்தில் முகநூல் தொடர்பு தனது கணவர் தட்சிணா மூர்த்திக்கும் தம்பி தமிழ்வாணனுக்கும் தெரிய வந்ததை தொடர்ந்து லோகநாயகியை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
கடந்த மாதம் லோகநாயகிக்கு மொட்டை அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது நண்பர் ஒருவரின் மூலமாக ஈரோடு பெண்கள் ஒருங்கிணைந்த சேவை அமைப்புக்கு தொடர்பு கொண்ட லோகநாயகி, தன்னை கணவரும் தனது தம்பி தமிழ்வாணனும் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, லோகநாயகி மீட்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் போது , தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை வழிமறித்த தட்சிணாமூர்த்தி, லோகநாயகியை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லோகநாயகியை மீட்டு பெண் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகநாயகியின் கணவரிடம் விசாரித்த போது தனது மனைவிக்கு மன நிலை சரியாக இல்லை என்றும் சிகிச்சைக்காக மொட்டை அடித்துள்ளதாகவும் கூறினார். ஆனால் தனக்கு கட்டாயப்படுத்தி மொட்டையடித்து விட்டதாக லோகநாயகி தெரிவித்துள்ளார்.
Newstm.in