இரவில் மனைவி, குழந்தைகள் கொலை.. உயிர் பிழைத்த கணவன் பகீர் வாக்குமூலம் !

சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர் பகுதியில் வசிப்பவர் பழனி (47). இவர் தனது மனைவி பவானி (40), மகள் தேவதர்ஷினி (17), மகன் பிரகதீஸ் (11) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இவர்கள் வீடு ஒரு நாள் மூடியே இருந்தது, வீட்டில் இருந்து யாருமே வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பெட் ரூமில் தாய், மகள், மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பழனி வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில், கை அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை உடனே மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் அவரது மனைவி, மகள், மகன் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பழனிக்கு நேற்று மயக்கம் தெளிந்து நினைவு திரும்பியது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன். கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்கள் வராததால் தொழிலில் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, நானும் தற்கொலைக்கு முயன்றேன் என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தற்கொலை முயற்சிக்கு கடன் பிரச்சினைதான் காரணமா, வேறு ஏதும் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in