மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்ல வேண்டும்?: 5 நிமிட வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி!
அந்த வீடியோவில், மணிப்பூரில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தங்களின் துயரத்தை கூறும் பலருக்கு ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி. ஜிரிபம் நிவாரண முகாமில் பெண் ஒருவர், தனது பாட்டி இன்னும் கலவரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நிவாரண முகாமில், ‘அரசிடம் இருந்து போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காததால் நான் எனது சகோதரனை இழந்தேன். முகாமில் போதிய மருந்துகள் இல்லை’ என்று தெரிவித்தார். முகாம்களில் மருந்துகள் கிடைக்க காங்கிரஸ் கட்சி உதவி செய்யும் என ராகுல் காந்தி என்று தெரிவித்தார்.
மொய்ராங் நிவாரண முகாமில் பேசிய ராகுல் காந்தி, “நான் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், நீங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வது குறித்து நான் உறுதி தர முடியாது. ஏனென்றால், அந்தக் கேள்விக்கு அரசுதான் பதிலளிக்க வேண்டும். அடுத்த அமர்வில் நான் உங்களுக்காக பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.
மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்ற மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி சமூகத்தினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் இரு சமூகங்களுக்கு இடையில் கலவரம் வெடித்தது. மாநிலம் முழுவதும் பரவிய இந்த கலவரத்தால் 220 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் இன்னும் இனக் கலவரத்தின் பாதிப்பிலிருந்து மீளவில்லை.
मणिपुर में हिंसा शुरू होने के बाद, मैं तीसरी बार यहां आ चुका हूं, मगर अफसोस स्थिति में कोई सुधार नहीं है - आज भी प्रदेश दो टुकड़ों में बंटा हुआ है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2024
घर जल रहे हैं, मासूम ज़िंदगियां खतरे में हैं और हज़ारों परिवार relief camp में जीवन काटने पर मजबूर हैं।
प्रधानमंत्री को मणिपुर खुद… pic.twitter.com/8EaJ2Tn6v8

.png)