1. Home
  2. தமிழ்நாடு

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்..!

Q

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது.
இது தொடர்பாக இன்று (மே 07) காலை 10.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் உடன் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது.
பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்.
பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது; பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாத பாக்., அரசு அவர்களை ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் கூறியதாவது: 21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்க வில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன,என்றனர்.

Trending News

Latest News

You May Like