1. Home
  2. தமிழ்நாடு

உதயநிதிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ? - ஸ்டாலின் அதிரடி முடிவு என தகவல் !

உதயநிதிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ? - ஸ்டாலின் அதிரடி முடிவு என தகவல் !


அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்தடுத்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திமுகவின் அதிகார மையமாக மு.க ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தான் என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால் திமுக மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் ஆனால் அதனை நேரடியாக ஸ்டாலினிடம் சொல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுகவுக்கு தேர்தல் பணிபுரியும் பிரசாந்த் கிஷோரிடம் ஒரு சில திமுக பிரமுகர்கள் இதுகுறித்து புகார் கூறியதாக தெரிகிறது. இதனை பிரசாந்த் கிஷோர் நேரடியாக மு.க ஸ்டாலினிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை ஏற்று தேர்தல் வரை உதயநிதியை அடக்கி வாசிக்க வைக்கவேண்டும் என ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

உதயநிதிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ? - ஸ்டாலின் அதிரடி முடிவு என தகவல் !

அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் உதயநிதி சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது உதயநிதிக்கு சீட் கொடுக்க வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உதயநிதி தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது

newstm.in

Trending News

Latest News

You May Like