1. Home
  2. தமிழ்நாடு

மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம்..? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

1

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என்னும் சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று மாலை அறிவித்தார்.இந்நிலையில், சிஏஏ-வை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தவெக கட்சி தலைவர் விஜய்யும் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில்,  “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்... சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜய் ஒரு இடத்தில் கூட பாஜக அரசு என்று குறிப்பிடாமல் இருந்தது ஏன்..? இதனால், அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள், மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் என்று சாடி வருகின்றனர். தற்பொழுது இது குறித்து விவாதம்  வலைத்தளங்களில் அந்த வகையில், சினிமா விமர்சகரான பிஸ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், “பாஜக அரசை கண்டிக்க தைரியம் இல்லாத விஜய்யின் அரைவேக்காடு அரசியல். பருத்திமூட்டை கோடவ்ன்லேயே இருந்திருக்கலாம்” என விமர்சித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like