புதிய பாராளுமன்ற ஊழியர்களின் சீருடையில் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளது ஏன்..? மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி!!
லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு புதிய சீருடை உட்பட பல மாற்றங்களுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம், தனது முதல் கூட்டத்தொடரை நடத்த தயாராக இருக்கிறது.
அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் இரண்டு அவைகளையும் சேர்ந்த 271 ஊழியர்களுக்கு, க்ரீம் நிறத்தில் மேல் ஜாக்கெட்டும், இளம் சிவப்பு நிறத்தில் தாமரை அச்சிடப்பட்ட சட்டையும், காவி நிற கால் சட்டையும், செப்டம்பர் 6ம் தேதியன்றே வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.புலி, மயில் படங்களை பயன்படுத்தாமல், தாமரையை மட்டும் சீருடையில் பொறிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புதிய சீருடை, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஆண் மற்றும் பெண் என இரு பாலரும் அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 18ல் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர், சிறப்பு பூஜையுடன் தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Why lotus only?
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 12, 2023
why can’t peacock 🦚 or why can’t tiger 🐅 ?
Oh they’re not BJP party election symbol🙄
Why this fall sir @ombirlakota ? #NewDressforParliamentStaff https://t.co/MHP487PCmd