1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்..? தமிழிசை செளந்திரராஜன் கேள்வி..!

1

தூத்துக்குடியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்திரராஜன்  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று சொல்லுங்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 4,800 கோடி ரூபாய் திட்ட பணிகளை பாரத பிரதமர் தமிழகத்திற்கு வழங்கி உள்ளார். இதனை வீடு வீடாக சென்று தமிழக முதலமைச்சர் சொல்வாரா?

ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் ஊர் ஊராக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் வாங்கிய சுமார் 14 லட்சம் மனுக்கள் இன்னும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வருவதை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றும் விதமாக தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தையும் தொடங்கி தற்போது மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சுகாதாரத் துறை மிக சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினம்தோறும் தெரிவித்து வருகிறார். அப்படி என்றால் ஒவ்வொரு மருத்துவமனையும் சிறப்பாக இருப்பதாக தானே அர்த்தம். ஆனால் தமிழக முதலமைச்சர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருந்தால், ஏன் அவர் நேரடியாக அங்கே சென்று சிகிச்சை பெற்று இருக்கலாம். மக்களுக்கு ஒரு சிகிச்சை தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையா? பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை. பிறந்த குழந்தைகளை கூட தரையில் படுக்க வைக்கும் நிலையில் தான் தமிழகத்தில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தற்போது காவல்துறை டிஎஸ்பிக்கும் பாதுகாப்பு இல்லை. ஆகவே தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என அவர் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like