1. Home
  2. தமிழ்நாடு

அரசியலுக்கு வருவதில் ரஜினி பின்வாங்குவது ஏன் ?  வெளிவராத பரபரப்பு பின்னணி தகவல் !

அரசியலுக்கு வருவதில் ரஜினி பின்வாங்குவது ஏன் ?  வெளிவராத பரபரப்பு பின்னணி தகவல் !


அரசியலுக்கு வருவதில் நடிகர் ரஜினிக்கு உள்ள தயக்கம், நெருக்கடி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் முதன்முதலில் ஸ்டைலாக நடித்து பலரையும் கவர்ந்த ரஜினி, பின்பு அனைவரும் குடும்பத்தோடு படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது படங்களில் ஆபாச காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அது மட்டுமே போதாது என கருதி படத்தில் காமெடி ரோலையும் தானே ஏற்று செய்தார். அடுத்து, அவரது அரசியல் வசனத்தினற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வற்புறுத்திலின் பேரில் அரசியல் டயலாக் பேசி பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார். மேலும், தற்போது இளைஞர்களுக்கு பிடித்த பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டதால், ரசிகர்கள் உற்சாகத்துடன் ரஜினியை இன்று வரை ஆதரித்து வருகின்றனர்.

துக்ளக் சோ மற்றும் மூப்பனார் ஆகியோரின் நட்பால், அரசியல் ஆசை ரஜினிக்கு ஆரம்பத்தில் இருந்தது என்னோ உண்மை தான். ஆனால், அதன் ஆழம் தெரிந்த உடன் பின்வாங்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், அவரது ரசிகர்களும், அரசியல்வாதிகளும் ரஜினியை விடுதாக இல்லை. அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது ஆசைக்கு தீனி போடும் வகையில், அவ்வப்போது அரசியல் பக்கம் தலைகாட்டி விட்டு ஒதுக்கிவிடுது ரஜினியின் ஸ்டைல்.

தமிழகத்தின் ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா், ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.அது மட்டும்லாது, நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், நடிகர் கார்த்திக் என பலரும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டனர். தற்போது நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் தொடங்கிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தார். இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் அதிர்ச்சி டைந்தனர்.

இந்த நிலையில், அரசியல் களம் காண ரஜினி ஆர்வமாகவே இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வழக்கம் போல் ஒரே பல்டி அடித்துவிட்டார். "அரசியல் இனி நமக்கு ஒத்துவராது" என்ற திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதில் ரஜினி பின்வாங்குவது ஏன் ?  வெளிவராத பரபரப்பு பின்னணி தகவல் !

இதனையடுத்து அவரது பெயரில் "அரசியலுக்கு முழுக்கு" என்ற ரீதியில் பரபரப்பு அறிக்கை வெளியானது. அது எனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் சொன்னபடி எனது உடல் நிலை சரியில்லை என்பது உண்மையே" என பல்டிமேல் பல்டியடித்தார்.

இது தொடர்பாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, "ரஜினிக்கு ஆரம்பத்தில் அரசியல் ஆர்வம் இருந்தது உண்மையே. மூப்பனார், துக்கள் சோ மறைவுக்கு பின்னர் அவர் அதில் இருந்து பின் வாங்கி விட்டார். காலத்தின் நிர்பந்தம் காரணமாக அவர் அதை வெளியில் சொல்லவில்லை. தற்போது சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்கின்றனர்.

மேலும், ரஜினிக்கு புகழ், பணம், அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என எல்லாமே அவரிடம் இருக்கு. பின்பு எதற்கு அரசியல். மேலும், அவரது உடல் நிலை தமிழகம் முழுவதும் சுற்றிவரும் அளவுக்கு தயார் நிலையில் இல்லை.

ரஜினி நடிகராகவே இருந்துவிட்டதால், அவர் பணம் போடாமலே லாபம் பார்ப்பது அவரது பாணியாக உள்ளது. அப்படி இருக்க, இப்போது, அவர் சொந்தமாக முதலீடு போட்டு தொழில் செய் என்றால் எப்படி செய்வார். இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லாத்துக்குமே பொருந்தும் என்று ரகசியத்தை உடைத்தனர்.

"தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக கால் ஊன்ற வேண்டும் என்றால் ரஜினியின் தயவு தேவை. ஒரே ஒரு முறை, அதாவது இந்த ஒரு முறை மட்டும் ரஜினி ஆதரித்தால் போதும், இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைத்துவிடும். அதை வைத்து அடுத்த முறை மூன்று இலக்கத்திற்கு கொண்டு சென்றுவிடலாம்" என்பது டெல்லி பாஜகவின் கணக்கு.

பாஜகவின் அன்பு பிடியில் ரஜினி சிக்கி இருப்பதால், அவரால் மூடிமறைக்கவும் முடியவில்லை. வெளியில் சொல்லவும் முடியவில்லை. இதுதான் தற்போதையை கள நிலவரம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Trending News

Latest News

You May Like