திடீரென ஏன் இப்படி ஒரு வெயில்? வேளாண் காலநிலை ஆய்வு மையம் விளக்கம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, துவங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த மாதம் தெரிவித்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த வாரம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மலைப்பகுதிகளில், மழை அதிகளவில் பெய்தது.
கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பின், மழை போய் வெயில் அதிகமாக இருந்து வருகிறது.
மழைகாலத்தில் வெயில் அடிப்பதன் காரணம் குறித்து, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறியுள்ளதாவது,
''தற்போது மழை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெயில் அதிகரித்துள்ளது போல் தோன்றுகிறது. நமக்கு 36 - 37 டிகிரி செல்சியஸ்க்கு உள் தான் வெயில் உள்ளது.
மீண்டும் மெல்ல பருவமழை துவங்கியுள்ளது. காற்று அடிக்கத் துவங்கியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் இனி இருக்காது. அடுத்த ஓரிரு நாட்களில் மழை இருக்கும். அப்போது வெப்பம் குறைந்து விடும்,'' என்றார்.