1. Home
  2. தமிழ்நாடு

28,00,00,000 அபராதத்தொகையை இதுவரை ஏன் வசூலிக்கவில்லை..! ஐகோர்ட் கேள்வி..!

1

கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து  62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர்  அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக முன்னாள் எம்பி டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர்,  அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்த 1998ம் ஆண்டு டிடிவி. தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து  அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம்,  31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது. இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது  தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து  கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல்  செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு 18 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இறுதி விசாரணைக்கு நடைபெற்றுவருகிறது. அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ்  தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக அதை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால், அவரை திவாலானவர் என  அறிவி்க்கக் கோருவதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை என விளக்கமளித்தார். 

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 100 சதுர அடியை ஒரு தனிநபர் ஆக்கிரமித்தால் அரசு அதிகாரிகள் புல்டசர் கொண்டு இடிக்க செல்வார்கள். ஆனால் இங்கு 28 கோடியை ஒருவர் செலுத்தவில்லை ஆனால் அமலாக்கத்துறை  உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை  வசூலிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.சட்டத்தின் அனைவரும் சமம், பிரதமராக இருந்தாலும், குடியுரசு தலைவரானலும் அனைவரும் சமம்தான் என நீதிபதிகள், மாஜிஸ்திரரேட் முன்பு நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கவேண்டும் என்று நினைக்கும் சாமானியர்களுக்குத்தான் நீங்கள் சொல்லும் சட்டம் எல்லாம்,டிடிவி தினகரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு அதெல்லாம் கிடையாதா எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.வழக்கு விசாரணை நாளையும் தொடர்கிறது.

Trending News

Latest News

You May Like