செய்தி வாசிப்பாளர் ஏன் பெண்களின் ஆடை பற்றி பேசுகிறார்? காயத்ரி ரகுராம் ஆவேசம்..!

சென்னையில் மதுபான பார் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை நந்தனம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பார் நள்ளிரவு 1 மணிக்கு மேல் இயங்கியதாக கூறப்படுகிறது. அதுவும் அதிக சத்தத்துடன்...
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார், அங்கு சென்று பாரை மூட சொல்லியும் கேட்காததால் காவல் ஆய்வாளரே அங்கு வந்து நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போதும் கேட்காத பார் நிர்வாகிகள் கதவை மூடி தங்களை காக்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் கதவை திறந்து சோதனையிட்ட போது அரைகுறை ஆடையுடன் போதையில் இருந்தவர்கள் தள்ளாடியபடி ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், கேமரா மேன் ஏன் பெண்களை மட்டும் குறிவைப்பது? செய்தி வாசிப்பாளர் ஏன் பெண்களின் ஆடை பற்றி பேசுகிறார்? இது ஒரு பெண் வெறுப்பு வழி இல்லையா? ஒருவரின் அனுமதியின்றி, அவர்களை எப்படி கேமரா முன் இருக்க வற்புறுத்த முடியும்? நீங்கள் ஒருவரை அச்சுறுத்த முடியாது, இது தனியுரிமை மீறலாகும். காலக்கெடுவைத் தாண்டி மதுக்கடையை நடத்தியதுதான் தவறு. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் மது அருந்தவும், இசை நடனம் செய்ய அவர்கள் அங்கு சென்றனர். அது அவர்களின் தவறல்ல. அந்த இடம் சட்டப்பூர்வமாக இயங்குகிறதா அல்லது சட்டவிரோதமாக இயங்குகிறதா என்பது கேள்விக்குறியே.… என பதிவிட்டுள்ளார்
கேமரா மேன் ஏன் பெண்களை மட்டும் குறிவைப்பது? செய்தி வாசிப்பாளர் ஏன் பெண்களின் ஆடை பற்றி பேசுகிறார்? இது ஒரு பெண் வெறுப்பு வழி இல்லையா? ஒருவரின் அனுமதியின்றி, அவர்களை எப்படி கேமரா முன் இருக்க வற்புறுத்த முடியும்? நீங்கள் ஒருவரை அச்சுறுத்த முடியாது, 1/2 pic.twitter.com/bmp32ncOF9
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) November 20, 2023