1. Home
  2. தமிழ்நாடு

விஜயதசமியன்று மட்டும் வன்னி மரத்தை வலம் வர வேண்டும் ஏன் ?

விஜயதசமியன்று மட்டும் வன்னி மரத்தை வலம் வர வேண்டும் ஏன் ?

விஜயதசமியன்று மட்டும் வன்னி மரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அது ஏன் ?.

கோயில் தல விரு‌ட்சங்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களை மக்கள் வலம் வருவது மரபு. விஜயதசமி அன்று மட்டும் வன்னி மரத்திற்கு அப்படி என்ன விசேஷம். இதற்குப் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஓர் வன்னி மரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாளன்று அன்னை பராசக்தியை வழி பட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனர். அந்த நாளே விஜய தசமி. எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 மு றை வலம் வந்தால் எண்ணியது ஈடே றும் என்பது ஐதீகம்

கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்களும், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்குபவர்களும் விஜயதசமி நாளைத்தான் அவ்விஷயங்களை தொடங்குவதற்கான நாளாகத் தேர்ந்தெடுப்பார்கள். இதனை அட்சர அப்யாசம் என்பார்கள். கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் நடைபெறும் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.

Trending News

Latest News

You May Like