நயினார் நாகேந்திரனை சந்தித்தது ஏன் ? எஸ்.பி., வேலுமணி விளக்கம்..!
பா.ஜ.க., வின் நயினார் நாகேந்திரனை எஸ்.பி., வேலுமணி சந்தித்தது பேசுபொருளான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், பார்லிமென்ட் எம்.பி., க்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
அதன் பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரைச் சந்தித்த நிகழ்வை, அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர், பழனிசாமி கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.