1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியை ரமணியை கொலை செய்தது ஏன்? - காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு

1

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியை ரமணியை, கடந்த புதன்கிழமை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மதன்குமார் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் மதன்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மதன்குமார் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது., ரமணியும் நானும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனை அடுத்து அவரை திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் எனது பெற்றோர் ஆசிரியர் ரமணியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர்.

அதற்கு ரமணியின் பெற்றோர், எனது மகள் ஆசிரியராக உள்ளார். மீன்பிடித் தொழில் செய்பவருக்கு எங்கள் மகளை தர விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டனர். இருப்பினும் நான் தொடர்ந்து ரமணியிடம் பேசி நமது திருமணத்திற்கு உனது பெற்றோரை சம்மதிக்க சொல் என்று கூறினேன். ரமணியின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அவர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவில்லை. அவர் வேலை செய்யும் பள்ளிக்கு சென்று ''நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது'' என்று கூறினேன். ஆனால், ரமணி உன்னை திருமணம் செய்ய முடியாது, நீ இங்கிருந்து போய் விடு என்று விரட்டினார். எவ்வளவோ போராடியும் திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக்கொலை செய்தேன். இவ்வாறு போலீசாரிடம் மதன்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like