ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? மனைவி சாயிரா பானு விளக்கம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். ‛ஆஸ்கர்' விருது வென்ற இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, ஏஆர் ரஹ்மானின் மனைவி சாயிரா பானு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வ அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை நீக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாயிரா பானு எடுத்துள்ளார். இந்த இக்கட்டனா நேரத்தில் சாயிரா பானு பொதுமக்களிடம் இருந்து பிரைவேசியை உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.