1. Home
  2. தமிழ்நாடு

’ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாட சம்மதித்தது ஏன்?- நடிகை சமந்தா ஓபன் டாக் !!

’ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாட சம்மதித்தது ஏன்?- நடிகை சமந்தா ஓபன் டாக் !!


சமந்தாவின் கவர்ச்சி நடனத்தில் வெளிவந்துள்ள ஓ சொல்றியா பாடல் தான் தற்போது பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. தொடக்கத்தில் சிலர் இப்பாடலை எதிர்த்தாலும் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

’ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாட சம்மதித்தது ஏன்?- நடிகை சமந்தா ஓபன் டாக் !!

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர் வெளியான ஓ சொல்றியா பாடலால் சமந்தா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தெலுங்கு தமிழில் ஆண்கள் சங்கத்தினர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புஷ்பா பட நிகழ்ச்சியின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜூன் பாடல் வரிகள் மீதான விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் பாடல் வரிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி உண்மைதான என பதிலளித்தார்.

இந்த நிலையில் படம் ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்து வரும் வேளையில் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா ஆடிய பாடலை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

’ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாட சம்மதித்தது ஏன்?- நடிகை சமந்தா ஓபன் டாக் !!

இந்த நிலையில், ஓ சொல்றியா பாடலுக்கு தான் ஆட ஒப்புக்கொண்டது பற்றி நடிகை சமந்தாவே தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ஓ சொல்றியா பாடலில் ஆடுவதற்காக முதலில் இயக்குநர் சுகுமார் அணுகிய போது மறுத்ததாகவும், முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டேவும் ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதை சுட்டிக்காட்டியிருக்கிறாராம்.

அதனையடுத்து ஓ சொல்றியா பாடலில் ஆட சமந்தா சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த பாடலில் ஆடுவதற்காக சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்பளம் இன்னும் கோடிக்கு கூட எட்டாத நிலையில், ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா என நடிகைகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.


newstm.in


Trending News

Latest News

You May Like