1. Home
  2. தமிழ்நாடு

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்..?எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

1

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுகவில் சுய லாபத்துக்காக செய்யும் அரசியலால் அக்கட்சி அழிந்துகொண்டு உள்ளது என்றும், நம்பிக்கை துரோகி என்று ஒருவரை சொல்ல வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குதான் அது பொருந்தும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தனக்கு அருகில் அமர வைத்தார். ஆனால், அவர் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார் என்றெல்லாம் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த சூழலில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல பேசக்கூடியவர் அண்ணாமலை. நான் துரோகி கிடையாது. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான். ஏனெனில் நான் பிரதமரின் பக்கத்தில் அமர்ந்து பிறகு துரோகம் செய்துவிட்டேன் என்று கூறுகிறார். பிரதமரின் அருகில் அமர்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், அதற்குப் பிறகு நடந்தது என்ன? எங்கள் கட்சியின் பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அண்ணா விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். அப்படிப்பட்ட எங்கள் தலைவர்களை அவதூறாக, கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

பக்கத்தில் உட்கார்ந்துவிட்டு சென்றதற்கே உனக்கு அவ்வளவு துடிக்குதே.. எங்களை ஆளாக்கிய தலைவர்களை பேசினால் எங்களுக்கு எவ்வளவு உள்ளக் குமுறல் வரும். நாங்கள் உணர்ச்சியுள்ள மனிதர்கள் தான்.. யாருக்கும் அடிமை கிடையாது. அண்ணாமலை கட்சித் தலைவர் பதவிக்கே பொருத்தம் இல்லாதவர். நாங்கள் 50 ஆண்டுகாலம் உழைத்த பிறகுதான் தலைவர் பதவிக்கு வந்துள்ளோம். அண்ணாமலை போல அப்பாயின்மெண்ட் பதவி கிடையாது” என்று காட்டமாக விமர்சித்தார்.

Trending News

Latest News

You May Like