நான் ஏன் அதிமுகவில் இருந்து விலகினேன்..? அன்வர் ராஜா விளக்கம்..!
அதிமுகவில் அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இனைந்த பின் செய்தியாளர்களை அன்வர் ராஜா சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக உடன் கூட்டணி என்ற உடன் எனது மனக்குமுறல்களை அவர்கள் கேட்கவில்லை. என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெறும் என அமித் ஷா கூறுகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என நேற்றுதான் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பாஜக என்பது நெகடிவ் ஃபேர்ஸ், தமிழ்நாட்டில் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் அதிமுகவில் இல்லை.
இந்தியாவுக்கே உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல, அதிமுகவை அழிப்பதே நோக்கம். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கட்சிகளை அழிக்க நினைத்தது இல்லை. பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. அதிமுக கொள்கைகளில் இருந்து தற்போதைய அதிமுக தடம் புரண்டுள்ளது.
அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற தகவல் வெளியான நிலையில் அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.