நான் ஏன் திருநீறை அளித்தேன்... திருமாவளவன் விளக்கம்..!

திருப்பரங்குன்றத்துக்கு நான் சென்றிருந்தேன். தோழர்களின் அழைப்பை ஏற்று, முருகன் கோவிலில் வழிபாடு செய்தேன். அங்கு 30 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நான் மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம்.
மீண்டும் அந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது, சென்றேன். இப்போது கோவிலை சீர்செய்து கொண்டு இருக்கிறார்கள், மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆகவே கருவறைக்குள் இருக்கிற, அந்த குடவறை கோவிலாக உள்ள அந்த குகையில், முருகனை பார்க்க இயலவில்லை.
வெளியே ஒரு இடத்தில் அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற முருகன், தெய்வானை உள்ளிட்ட இதர தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதித்தார்கள். பூஜை செய்து எனக்கு திருநீறு பூசினார்கள். கழுத்தில் எனக்கு மாலை அணிவித்தார்கள். தலையில் பரிவட்டம் கட்டினார்கள்.
உடன் வந்த அனைவரும் முருகனை தரிசித்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கோவிலுக்குள் இருந்தோம். ஏராளமானோர் என்னோடு படம் எடுத்துக் கொண்டார்கள். தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டு இருக்கிற பெண்கள் பல பேர், என்னோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.
எல்லாம் முடிந்து நான், வெளியே வாசலுக்கு வந்த போது, ஒரு புதுமணத்தம்பதி செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட போது, நானாக வாங்கி எடுத்தேன். அவர்களே எடுக்க முயற்சித்த போது, நானே செல்பி எடுத்தேன்.
அப்போது நெற்றியை நான், துடைத்தேன். அது வழக்கமான ஒன்று. திருநீறை பார்த்து துடைக்கவில்லை. நெற்றியில் வியர்வை இருந்தால் வழக்கமாக நான் தலையை இப்படி (வலது கையை இடதுபுறம் கொண்டு சென்று நெற்றியில் இருப்பதை அழிப்பது போன்று கையால் செய்து காட்டுகிறார்) துடைப்பது வழக்கமானது.
எந்த உள்நோக்கமும் இல்லாமல் சரிசெய்தேன் அல்லது துடைத்தேன். இதை வைத்துக் கொண்டு ஒரு வாரகாலமாக கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். அதை பற்றி நாம் கவலைப்படவில்லை என்றாலும் கூட, என் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சியினர், என் மீது நம்பிக்கை உள்ள பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.