சென்னையில் கமாண்டோ படை ஏன் ? காவல் ஆணையர் விளக்கம்...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொறுப்பில்லாத மக்களால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் கமாண்டோ படையினர் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க களம் இறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. எனவே கமாண்டோ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் தேவை தற்போது இல்லை என்றார்.
Newstm.in