1. Home
  2. தமிழ்நாடு

60 வயசுக்கு மேல உங்களுக்கு ஏன் அரசியல்? தவெக தலைவர் விஜய்யை விளாசிய வீரலட்சுமி..!

Q

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, 

60 வயதுக்கு மேல் விஜய் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, செய்தியாளர்கள் என்னை கேள்வி கேட்பதுப் போல் விஜய்யை கேட்டுப்பாருங்கள்.

ஒன் டூ ஓன்.. ஃபேஸ் டூ ஃபேஸ்.. கண்ணை பார்த்து பேச சொல்லுங்கள். அவரால் பேச முடியாது. காரணம்.. பக்கத்தில் இருப்பவர்கள் டயலாக் எழுதி பேப்பரை அவரிடம் கொடுக்க வேண்டும்.. அப்படிப்பட்ட அரசியல் தலைவர் தமிழ்நாட்டுக்கும் எங்கள் மண்ணுக்கும் தேவையில்லை. நீங்கள் எதற்காக அரசியலுக்கு வர்றீங்க? உங்கள் சினிமா துறையில் ஏராளமான பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்

அவர்களுக்கு போய் பாதுகாப்பு கொடுங்கள். அவர்களுக்கு போய் உதவி செய்யுங்கள். இந்த மண்ணின் அரசியலை பார்க்க எங்களுக்கு தெரியும். இந்த மண்ணின் பூர்வக்குடி நாங்கள்தான். எங்களுக்கு அரசியல் அறிவும் தகுதியும் உள்ளது. 60 வயதுக்கு மேல் நீங்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு இளைஞர்களை பார்த்தால் கேனைப் போல் தெரிகிறதா?

உங்களுடன் இருப்பதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள். அவர்கள் கானல் நீர் போல் கொஞ்ச நாள்தான் இருப்பார்கள். அப்புறம் காணாமல் போய்விடுவார்கள். சீசன் பறவை போல அரசியலில் ஒவ்வொருவர் உருவாகிறார்கள். விஜயகாந்த் அண்ணன் இறந்த பிறகு தான் அவர் மக்களுக்கு செய்த உதவிகள் தெரிந்தது.

இவர்கள் சாப்பாடு போடுவார்கள், விஜய் போட்டோவை பக்கத்திலேயே வைத்துக் கொள்வார்கள். பத்து ரூபாய்க்கு தர்பூசணி பழத்தை கொடுத்துவிட்டு விஜய் படத்தை வைத்து ரீல்ஸ் போடுவார்கள். இது ஒரு அரசியலா? இது போன்ற மானங்கெட்ட கேடுகெட்ட அரசியல் தமிழ் நாட்டுக்கும் தேவை இல்லை தமிழ் நாட்டு மக்களுக்கும் தேவையில்லை.

விஜய்யையும் வீரலட்சுமி சமப்படுத்தி பார்த்தால் நாங்கள் அன்னக்காவடி போன்றுதான் தெரிவோம். அவர் ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ளார். அப்படி இருக்கும் போது நாங்கள் அவருக்கு அன்னக்காவடிதான். விஜய் பணத்தை பார்த்து அரசியலுக்கு வந்துள்ளார். நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் மனசைப் பார்த்து அரசியலுக்கு வந்துள்ளோம். இவ்வாறு விஜயலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.

.

Trending News

Latest News

You May Like