1. Home
  2. தமிழ்நாடு

அடடே! சிக்னல்களில் இப்படி ஒரு திட்டமா..?

1

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது.இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வரும் நாட்களில் இந்த வெயில் இன்னும் மோசம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. 

இந்தநிலையில் கோடை வெயில் துவங்கியதிலிருந்து புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள் இருந்து வந்தது. இந்த ஆண்டு புதுவையில் முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் எஸ் வி பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் நிழல் தரும் விதமாக வாகன ஓட்டிகளின் வசதிக்காக தற்காலிகமாக பச்சை நிறம் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலிலிருந்து தப்பிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னல்களில் தற்காலிக பச்சை நிற மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திருச்சியில் 100 மீட்டருக்கு ஒரு சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் வெயிலில் செய்வதறியாமல் திகைத்து வந்த நிலையில் தற்போது காவல்துறை சார்பில் இந்த தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Trending News

Latest News

You May Like