1. Home
  2. தமிழ்நாடு

அடடே..! இனி பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் போர்டு!

1

சென்னை மாநகரில் நாம் செல்ல விரும்பும் பேருந்து எத்தனை மணிக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வரும் எனத் தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

இவர்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  ஏஐ மூலம் கண்டறிந்து  குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது நிறுத்தத்துக்கு குறிப்பிட்ட பேருந்து எத்தனை மணிக்கு, எத்தனை நிமிடங்களில் வரும் என்பதை அறிவிக்கும் டிஜிட்டல் பலகை நிறுவ திட்டமிட்டு வருகிறது.  இதற்காக மாநகரில் தற்போது செயல்பாட்டில் இருக்கும்  532 பேருந்து நிறுத்தங்கள், 71 பேருந்து முனையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப 2 வரிகள், 4 வரிகள், 10 வரிகளில் தகவல் தரும் டிஜிட்டல் பலகைகள் நிறுவப்படும். இவை முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் எழும்பூர், பல்லவன் சாலை, ராயப்பேட்டை உட்பட  8 இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது டிஜிட்டல் பலகைகளை நிறுவியுள்ளது. 

Trending News

Latest News

You May Like