பாஜக யாருடன் கூட்டணி..? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு..!
பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது குறித்து பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியில் புதிய தமிழகம், தமாகா, ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகியோர் கொண்ட கட்சி இருக்கிறது. இந்த நிலையில் வலுவான ஒரு கட்சியுடன் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக விரும்புகிறது. இதனிடையே, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்திருக்கிறார். அவரது தலைமையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக உடனான கூட்டணி முறிவு பெற்றிருக்கும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது