1. Home
  2. தமிழ்நாடு

தலைநகர் டெல்லியின் அடுத்த முதல்வர் - யார் இந்த ரேகா குப்தா?

1

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ரேகா குப்தா நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். கல்லூரி காலம் தொட்டே தீவிர அரசியலில் இறங்கியவர். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் வென்றவர். அடிப்படையில் வக்கீலான ரேகா குப்தா, டில்லி பல்கலை. மாணவர் தலைவராக பணியாற்றியவர். 2007ல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து உத்தரி பிதாம்புரா கவுன்சிலராக வென்றார். தெற்கு டில்லியின் மேயராகவும் முத்திரை பதித்தவர். தேசிய மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டில்லி பா.ஜ., பொதுச் செயலாளராக உள்ளார்.

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பிப்ரவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார். ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை ரேகா குப்தா 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்களுக்குப் பிறகு முதல்வரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது.

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார். 

ரேகா குப்தா 1974 இல் ஹரியானா மாநிலத்தில் உள்ள நந்த்கரில் பிறந்தார். ரேகா குப்தாவுக்கு இரண்டு வயதாக இருந்த போதே அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. அவர் டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முழுமையாக படித்தார் . டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக மாணவ பருவத்திலேயே போட்டியிட்டு வென்று அரசியலில் நுழைந்தார். தற்போது சாலி மார் தொகுதியில் ஆம் ஆத்மியின் பந்தனா குமாரியை எதிர்த்து போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அரசியலில் திருப்புமுனையை எற்படுத்தினார். 27 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக மீண்டும் தற்போது ஆட்சிக்கு வந்ததில் களவேலைகளை பார்த்ததில் ரேகா குப்தாவும் ஒருவர் என்பதால் பாஜக மேலிடம் முக்கியத்துவம் தந்துள்ளது.

ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரமாண பத்திரத்தில், ரேகா குப்தா தனது சொத்தின் நிகர மதிப்பு சுமார் ₹5.31 கோடி (தோராயமாக $640,000) என கூறியுள்ளார். மேலும் அவர் சொத்து மதிப்புடன் கடன் பற்றியும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். ரேகா குப்தாவிற்கு கடன்கள் சுமார் ₹1.20 கோடி (சுமார் $145,000) என்று கூறியுள்ளார்.

மொத்த சொத்துக்கள்: ₹5,31,34,981 (₹5.3 கோடி)

மொத்த பொறுப்புகள்: ₹1,20,33,720 (₹1.2 கோடி)

நிகர மதிப்பு: ₹4,11,01,261 (₹4.1 கோடி)

Trending News

Latest News

You May Like