1. Home
  2. தமிழ்நாடு

யாரு சொன்னது..? எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது என்று...: ஒரே போடாக போட்ட முத்தரசன்..!

1

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நாட்டின் அரசியல் போக்குகள், ஒன்றிய அரசு பின்பற்றும் கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக தெரிகிறது. நாடு ஏதோ ஒரு ஆபத்தை நோக்கி நகர்கிறது. பாசிசம் இந்தியாவில் படமெடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது.

ஆட்சி அதிகாரம், பண பலத்தைக் கொண்டு மிரட்டல் அரசியல் செய்து வருகிறது. பாசிச ஆட்சி நடத்துவதற்கான அஸ்திவாரத்தை பாஜக போட்டு வருகிறது” என்று விமர்சனம் செய்தார்.

வக்ஃபு வாரிய சட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாள் ஒரு கருப்பு நாள் என்ற அவர், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

தொடர்ந்து, “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் நடப்பதை பார்த்தால் ஒரு தோழமைப்பூர்வ பேச்சுபோல தெரியவில்லை, மிரட்டல் பேச்சுவார்த்தை போல தெரிகிறது. பாஜகவோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஒன்றரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி சத்தியம் செய்தார்.ஆனால், இப்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார். சமீப காலங்களில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தம்பிதுரை ஆகியோர் தனித் தனியாக சந்தித்துள்ளனர். இதன்மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது.

அதிமுகவை மிரட்டி தனது அணியில் சேர வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. பாஜக உத்தரவுக்கு அதிமுக கட்டுப்படவில்லை எனில் அதன் பொதுச்செயலாளர் மாற்றப்படுவார். பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில்தான் உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார். 

Trending News

Latest News

You May Like