அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் அட்லி 'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து அட்லி விஜயுடன் ஜோடி சேர்ந்தார்.
அட்லி - விஜய் கூட்டணி இணைந்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களை கொடுத்தனர். இதனையடுத்து அட்லிக்கு பாலிவுட் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் ஷாருக்கானுடனே அட்லி இணையவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்த படம் குறித்து செம தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சங்கி (Sanki) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம்.
இதனால் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் ஜோடி நடிக்க இருக்கும் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏற்கனவே, சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் - தீபிகா படுகோன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in