கவின் உடைய ஆதரவு பிக்பாஸ் வீட்டில் யாருக்கு தெரியுமா ..?

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இதுவரை மூன்று சீசன் நிறைவடைந்துள்ளது தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த நான்காவது சீசனில் மக்களுக்கு தெரிந்த அதிக பிரபலங்கள் இதில் வலம் வருகிறார்கள். சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக தொகுப்பாளி அர்ச்சனா நுழைந்தார். அதுமட்டுமின்றி கடந்த வாரம் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.
இந்தநிலையில் டாஸ்க் காரணமாக இரண்டாக பிரிந்த பிக்பாஸ் போட்டி அவர்களிடம் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது இதனால் திடீரென்று சுரேஷ் சக்கரவர்த்தி கையிலிருந்த பொருளை எடுத்து சனம் செட்டியை அடித்தார் இதனால் ஆத்திரமடைந்த சனம் அவரை வாடா போடா என்று திட்ட தொடங்கியுள்ளார்.
May the force be with you #SureshChakravarthi sir.. !
— Kavin (@Kavin_m_0431) October 21, 2020
பின்னர் தனது தவறை உணர்ந்து கொண்டு சுரேஷ் பிக்பாஸில் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு ஆதரவாக தற்போது பிக் பாஸ் பிரபலம் கவின் ஒரு ட்விட் போட்டுள்ளார். அந்த விட்டில் may the force be with you Suresh Chakravarthy sir என்று பதிவு செய்துள்ளார்.
newstm.in