1. Home
  2. தமிழ்நாடு

யார் இந்த பெண் சாமியார் அன்னபூரணி? காவல்துறை தடை விதித்தது ஏன்?

யார் இந்த பெண் சாமியார் அன்னபூரணி? காவல்துறை தடை விதித்தது ஏன்?


ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி திடீரென உதயமான பெண் சாமியார் அன்னபூரணி தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். அவர் பங்கேற்று ஆசி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அப்படியாரு இந்த சாமியார் அன்னபூரணி என சிலர் கேட்கலாம். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு அவர் அதிகம் தெரிந்தவர்.

யார் இந்த பெண் சாமியார் அன்னபூரணி? காவல்துறை தடை விதித்தது ஏன்?

சமூக வலைதளங்கள், இணையத்தில் திடீரென பெண் சாமியார் ஒருவரின் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் பரவியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்தவர் அன்னபூரணி.
ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் நானே என கூறி வரும் இவர், பக்தர்களுக்கு சாமியாடியபடியே அருள்வாக்கு கூறும் வீடியோக்களும் இணையத்தை அதிர வைத்தது. அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தனியாக யூட்யூப் பக்கம், பேஸ்புக் பக்கம் உள்ளிட்டவற்றை உருவாக்கி ஏராளமான பக்தர்களும் அவர்களை பின்பற்றி வருவதை காண நேர்ந்தது.

இதை எல்லாம் பார்த்து கொதித்து போன இணையவாசிகள் அவரின் 2014 ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து வீடியோவை பகிர்ந்ததோடு அன்னபூரணியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

யார் இந்த பெண் சாமியார் அன்னபூரணி? காவல்துறை தடை விதித்தது ஏன்?

ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி கலந்து கொண்டார். பின்னர் அவரின் கணவர் இறந்து போகவே, 2016ஆம் ஆண்டு அவரின் சிலையை பிரதிஷ்டை செய்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி உள்ளார். பின்னர் சாமியார் அவதாரம் எடுத்த அன்னபூரணியின் வீடியோ தான் இப்போது இணையத்தை கதிகலங்க வைத்து வருகிறது. இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம்.

கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அன்னபூரணியின் தரிசன நிகழ்ச்சிகளும் இதற்கு முன்பாக நடந்ததாக கூறப்படுகிறது. பாவம் இந்த கோவை மக்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆங்கில புத்தாண்டான வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று அன்னபூரணியின் தரிசன நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதுதொடர்பான போஸ்டர்களும் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட போலீசார் திருமண மண்டப உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது ரோஹித் என்பவர் இந்த நிகழ்வுக்கு முன் பதிவு செய்ததாக கூறிய நிலையில் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார். ஆனால் காவல்துறை அனுமதி பெறாமல் இந்த கூட்டம் நடக்க இருந்ததும் உறுதியான நிலையில் போலீசார், உடனடியாக அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like