1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக புதிய தலைவர் யார்? ரேஸில் சரத்குமாரும் இருக்காராம்..!

Q

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போதும் இதேபோல் செய்திகள் வந்தன.

எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்போது தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளன என்றும் இன்னொரு விதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட அண்ணாமலை பதவி விலகுவது அல்லது நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

இதனால் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம், டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like